ஆந்திரா: அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசபட்டணத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலையில் 32 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் ஆலையின் பல அறைகள் தரைமட்டமாகின.