* ஜெய்ப்பூரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
* சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வென்றுள்ளது.
* ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு ஆடிய 5 போட்டிகளில், 3 போட்டிகளில் வென்றுள்ளது.
* இந்த 2அணிகளுக்கும் இது 6வது லீக் போட்டியாகும்.
* ஐபிஎல் தொடர்களில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் பெங்களூர் 15, ராஜஸ்தான் 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 3 போட்டிகள் மழையால் ரத்தாகின.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக ராஜஸ்தான் 217, பெங்களூர் 200 ரன் வெளுத்துள்ளன.
* குறைந்தபட்சமாக ராஜஸ்தான் 70, பெங்களூரு 58 ரன்னில் சுருண்டுள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ராஜஸ்தான் 3லும், பெங்களூர் 2லும் வென்றுள்ளன.
* ஜெய்பூரில் இந்த 2 அணிகளும் மோதிய 9 போட்டிகளில் ராஜஸ்தான் 5 போட்டிகளிலும் , பெங்களூரு 4லும் வெற்றி பெற்றுள்ளன.
* ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 29வது லீக் ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
* அக்சர் படேல் தலைமையிலான டெல்லி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4லும் வெற்றி பெற்றுள்ளது.
* இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணியான டெல்லி இன்று தனது 5வது லீக் போட்டியில் களம் காண்கிறது.
* ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இதுவரை 5 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வென்றுள்ளது.
* இன்று மும்பை 6வது ஆட்டத்தில் 2வது வெற்றிக்காக டெல்லியை எதிர்க்க இருக்கிறது.
* இவ்விரு அணிகளும் இதுவரை 35 ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.
* அவற்றில் மும்பை 19 ஆட்டங்களிலும், டெல்லி 16 ஆட்டங்களிலும் வென்று காட்டியுள்ளன.
* இவற்றில் அதிகபட்சமாக டெல்லி 257, மும்பை 247 ரன் விளாசி இருக்கின்றன. குறைந்தபட்சமாக மும்பை 92, டெல்லி 66 ரன் மட்டும் எடுத்துள்ளன.
* டெல்லியின் சொந்தகளமான அருண் ஜெட்லி(பெரோஸ்ஷா கோட்லா) கிரிக்கெட் அரங்கில் இந்த 2 அணிகளும் 12 முறை மோதி இருக்கின்றன. அவற்றில் டெல்லி 7-5 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘சிதம்பரம் ஸ்டேடியத்தின் உள்ளேயும், வெளியேயும், ஏஐ தொழில் நுட்பத்தில் செயல்படும் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தவறுகள் நடப்பதை துல்லியமாக கண்காணித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முடிகிறது. சமீபத்தில் நடந்த போட்டியின்போது திருடுபோன 28 செல்போன்கள் இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன’ என்றனர்.
* சொந்த மண் ரசிகர்களை நோகடித்த சென்னை
சென்னையில் நடந்த கொல்கத்தாவுடனான போட்டியில் சென்னை அணி, 103 ரன்களை மட்டுமே எடுத்து மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி சென்னை ரசிகர்களை, ரொம்பவே நொந்து நோகடிக்கச் செய்துள்ளது. இந்த ஸ்கோர், இந்த மைதானத்தில் பதிவான சென்னையின் மிக குறைந்த ஸ்கோர் ஆகும். இந்த மைதானத்தில் சென்னை அணி, முதல் முறையாக 3 அணிகளிடம் தொடர் தோல்விகளை தழுவி உள்ளது. அதுமட்டுமின்றி, 18 ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில், ஒட்டு மொத்தத்தில் 5 போட்டிகளில் சென்னை தொடர்ச்சியாக தோற்று, திக்கு தெரியாமல் தவித்து வருகிறது.
ஐபிஎல் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணிகளில் ஒன்றான குஜராத்தின் முன்னணி வீரர்களில் ஒருவரான, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா, தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்கனவே அணியில் இருந்து விலகி சொந்த நாட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், குஜராத் அணியில் ஆல் ரவுண்டராக இடம்பெற்றிருந்த வீரரான நியூசிலாந்தை சேர்ந்த கிளென் பிலிப்ஸ், காயம் காரணமாக அணியில் இருந்து விலகி சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளார். இந்த தகவலை, குஜராத் டைடன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 6ம் தேதி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது கிளென் பிலிப்சுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
The post ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள் appeared first on Dinakaran.