பெய்ஜிங்: ஈபிள் டவரை விட மிக உயரமான தொங்குபாலத்தை சீனா கட்டியுள்ளது. ஜூன் மாதம் அதன் திறப்பு விழா நடக்கிறது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் கட்டுமானத்தில் உள்ள தொங்கு பாலம் ஹுவாஜியாங் கேன்யன் பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் பெய்பன் ஆற்றை கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.2200 கோடி செலவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த பணி இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொங்கு பாலம் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இரண்டு மைல் தூரம் நீண்டுள்ள இந்த பாலம் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 200 மீட்டர் உயரமானது. அதாவது 2050 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.
பாலத்தின் இரும்பு கட்டமைப்புகள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடை கொண்டவை என்றும் மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாலம் பயண நேரத்தை 1 மணி நேரத்திலிருந்து வெறும் 1 நிமிடமாகக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. ஹுவாஜியாங் கேன்யன் தொங்கு பாலம் திறக்கப்பட்டால், இதுவே உலகின் மிக உயரமான பாலமாக அமையும். ஏற்கெனவே அதே பகுதியில் டியூஜ் பாலம் அமைந்துள்ளது. இது தற்போது உலகின் மிக உயரமான பாலமாக உள்ளது. இந்த பாலம் 883 அடி உயரம் கொண்டது. அந்த சாதனையை சீனா மீண்டும் தகர்க்க உள்ளது.
The post ஈபிள் டவரை விட பெரியது சீனாவில் உலகின் மிகவும் உயரமான தொங்கு பாலம்: ஜூன் மாதம் திறப்பு விழா appeared first on Dinakaran.