மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

சென்னை: தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி, தான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். த.பெ.தி.க. நடத்திய உள் அரங்க கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இந்தத் தகாத கருத்தை தான் பேசியது குறித்து உடனே மனப்பூர்வமாக வருந்தியதாகவும் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிகையில்; “தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Related Stories: