ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு..!!

சென்னை: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசிதழில் 10 மசோதாக்களும் சட்டமானதாக அறிவிக்கப்பட்டது. 10 மசோதாக்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவ. 2023 தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டது.

அதில், 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாவது திருத்த) சட்ட முன்வடிவு சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண்.48/2022) 19 அக்டோபர் 2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதாலும் மற்றும் கூறப்பட்ட சட்டமுன்வடிவிற்கு 13 நவம்பர் 2023 அன்று ஆளுநர் இசைவளிக்க மறுத்தார் என்பதாலும்: மற்றும் முதலமைச்சர் அவர்களால் 18.11.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் கூறப்பட்ட சட்டமுன்வடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு எந்தவித மாறுதலுமின்றி சட்டமன்றப் பேரவையில் மீண்டும் இயற்றப்பட்டது என்பதாலும்; மற்றும் கூறப்பட்ட சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண்.48/2022 18.11.2023 அன்று ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு. அவர் அந்தச் சட்டமுன்வடிவை 28.11.2023 அன்று குடியரசுத்தலைவரின் பரீசீலனைக்காக அனுப்பியிருந்தார் என்பதாகும்,

மற்றும் குடியரசுத்தலைவர் கூறப்பட்ட சட்டமுன்வடிவிற்கு 18.02.2024 அன்று ஒப்புதல் வழங்கி அது 07.03.2024 தேதியிட்டு தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி IV பிரிவு 2இல் தமிழ்நாடு சட்டம் 10/2024 என சட்டமாக வெளியிடப்பட்டு மேற்குறிய தேதியன்று. அதாவது 07.03.204 அன்று நடைமுறைக்கு வந்து விட்டது என்பதாகவும்; மற்றும் உச்சநீதிமன்றம் நீதிப்பேராணை மனு உரிமையியல் எண்.1239/2023 08.04.2025 தேதியிட்ட அதன் ஆணையில், மேற்குறிய சட்டமுன்வடியை குடியரசு தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்பிய பின்னர் குடியரசு தலைவர் எடுத்திருக்கக்கூடிய அனைத்து விளைவுறு நடவடிக்கைகளும் சட்டத்தின்படி இல்லா நிலையது என்றும் மேற்குறிய சட்ட முன்வடி மறுபரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட நாளில் அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது என்பதாகும்; எனவே தற்போது 08.05.2025 தேதியிட்டு உச்சநீதிமன்றத்தின் மேற்கூறிய ஆணையின் அடிப்படையில் கூறப்பட்ட சட்டமன்றத் பேரவை சட்டமுன்வடிவு எண்.48/20222 அனைத்து தமிழ்நாடு ஆளுநரால் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுத்தல் வேண்டும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: