பெஷாவர்: பாகிஸ்தானில் மிகவும் தேடப்பட்ட தீவிரவாதி உட்பட 2 பேரை தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று சுட்டு கொன்றனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணம், லோயர் டிர் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தீவிரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு படையினர் டிமர்காரா சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த தீவிரவாதிகளை தீவிரவாத தடுப்பு படையினர் மடக்கினர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
பதிலுக்கு தீவிரவாத தடுப்பு படையினர் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட ஹபீசுல்லா என்ற கோச்வான் என்பவர் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் சம்மந்தப்பட்டுள்ளார்.அவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
The post பாகிஸ்தானில் 2 தீவிரவாதிகள் சுட்டுகொலை appeared first on Dinakaran.