மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாக்குகளை கையாளுவதற்காக மின்னணு வாக்குப்பதிவு முறைகளை ஹேக்கிங் செய்வதில் உள்ள பாதிப்புக்கள் குறித்த ஆதாரங்களை தனது அலுவலகம் பெற்றுள்ளதாக அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் கூறியுள்ளார். இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படும் பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எளிய, சரியான மற்றும் துல்லியமான கால்குலேட்டர்கள் போலவே செயல்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தியா பயன்படுத்துகின்றது.

இணையம், வைஃபை அல்லது அகச்சிவப்பு கதிர்வீச்சு ஆகியவற்றுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைக்க முடியாது. இந்த இயந்திரங்கள் உச்சநீதிமன்றத்தால் சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் உண்மையான வாக்குப்பதிவுக்கு முன்னதாக பல்வேறு கட்டங்களில் அரசியல் கட்சிகளால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகின்றது. எனவே அவற்றை ஹேக் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: