தமிழக மக்கள் அனைவருக்கும் பங்குனி உத்திரம் நன்னாளில் நல்வாழ்த்துக்கள்: அண்ணாமலை!

சென்னை: தமிழக மக்கள் அனைவருக்கும் பங்குனி உத்திரம் நன்னாளில் நல்வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

சிவபெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும், குலதெய்வ வழிபாட்டுக்கும் உகந்த திருநாளாகிய, பங்குனி உத்திரம் நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகிடவும், நன்மைகள் நிலைத்திடவும், அனைத்து வளங்களும் கிடைத்திடவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என்று வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

The post தமிழக மக்கள் அனைவருக்கும் பங்குனி உத்திரம் நன்னாளில் நல்வாழ்த்துக்கள்: அண்ணாமலை! appeared first on Dinakaran.

Related Stories: