மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி – முத்துப்பேட்டை மெயின் ரோட்டில் சேரங்குளம் சட்ரஸ் அருகே தமிழ்நாடு மின் பகிர்மான கழகதிற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கான மோட்டார்களை இயக்க மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் வழித்தடத்தில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதுகுறித்து அப் பகுதி விவசாயிகள் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சோதித்த போது அதில் இருந்த விலை உயர்ந்த சுமார் 300 லிட்டர் ஆயிலை மர்ம நபர்கள் திருடி சென்றதும், இதன் காரணமாகவே மின் விநி யோகம் தடைப் பட்டதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.இது தொடர்பாக, இள மின் பொறியாளார் கிருஷ்ண மூர்த்தி என்பவர் மன்னா ர்குடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது, தமிழ்நாடு மின் பகிர்மான கழகதிற்கு சொந்தமான மின் கம்பங் கள், டிரான்ஸ்பார்மர்களில் அங்கீகரிக்கப் பட்ட ஊழியர்களை தவிர வேறு எவரும் ஏறுவதோ, பழுது பார்ப்பதோ கூடாது. மின் வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் ஆயில், மின் கம் பிகள் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக திருடி விற்பவர்கள் மற்றும் அவற்றை வாங்குபவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.
The post மன்னார்குடி அருகே ரூ.30 ஆயிரம் மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் ஆயில் திருட்டு appeared first on Dinakaran.