நெல்லை பல்கலையில் 2 பேராசிரியர் மீது உதவி பேராசிரியை பாலியல் புகார்

தியாகராஜநகர்: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியை ஒருவர் பெயரில் பாலியல் தொந்தரவு தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவருக்கு அனுப்பியுள்ள 3 பக்க கடிதம் நேற்று வெளியானது. அதில், தான் பிஎச்டி படிக்கும் போதே தனக்கு 2 பேராசிரியர்களால் பாலியல் மற்றும் துறை ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது. உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்த பின்னரும் இது தொடர்கிறது.

எனவே 2 பேராசிரியர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கடந்த வாரம் மாநில மகளிர் ஆணைய குழு பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் சந்திரசேகரிடம் கேட்டபோது, கடிதத்தில் சம்பந்தப்பட்ட 2 பேராசிரியர்கள் துறை ரீதியாக நெருக்கடி கொடுப்பதாகத்தான் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்றார்.

The post நெல்லை பல்கலையில் 2 பேராசிரியர் மீது உதவி பேராசிரியை பாலியல் புகார் appeared first on Dinakaran.

Related Stories: