கோபி அருகே தோகை விரித்து ஆடிய மயில்கள்


கோபி: கோபி அருகே 2 மயில்கள் அருகருகே தோகை விரித்து ஆடியதும், அந்த மயில்கள் முன்பு மூன்று ஆண் மயில்கள் சுற்றி வந்து ஆடிய காட்சி காண்போரை ஆச்சரியப்பட வைத்தது. மயில்கள் தோகை விரித்து ஆடினால் மழை வரும் என்பதை கிராமத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளும் எளிய வானிலை அறிக்கையாக உள்ளது. இந்நிலையில் கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் உள்ள விவசாய நிலங்களில் கரும்பு, சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகிறது. இந்த விவசாய நிலங்களில் நூற்றுக்கணக்கான மயில்கள் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை விவசாய நிலத்தில் இருந்த இரண்டு மயில்கள் அருகருகே திடீரென தோகை விரித்து ஆட துவங்கியது. அப்போது அங்கு உணவு தேடிக்கொண்டு இருந்த 3 ஆண் மயில்கள், திரைப்பட குரூப் நடன கலைஞர்கள் போல் தோகை விரித்து ஆடிய ஒரு மயில் முன்பு சுற்றிவந்து நடனமாடுவது போன்று ஆடத்தொடங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக 2 மயில்கள் தோகை விரித்து ஆடியதும், அவற்றின் முன் ஆண் மயில்கள் ஆடியது அவ்வழியாக சென்றவர்களை ஆச்சரியப்படுத்தியது.

The post கோபி அருகே தோகை விரித்து ஆடிய மயில்கள் appeared first on Dinakaran.

Related Stories: