நெல்லை: தங்கையுடனான காதலை கைவிட மறுத்ததால் தீர்த்துக்கட்டினேன் என்று வாலிபர் கொலையில் கைதான 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். நெல்லை டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ஆறுமுகம் (22). இவரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலை என்கிற சிவா (26) மற்றும் டவுன் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், மேலும் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் கழுத்தை அறுத்துக் கொலை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் சிவா மற்றும் மற்ற இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான 17 வயது சிறுவன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:எனது தங்கை முறை உறவினரான 13 வயது சிறுமியுடன் ஆறுமுகத்திற்கு பழக்கம் இருந்தது.
நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த விஷயம் எங்கள் குடும்பத்திற்குத் தெரியவரவே, எனது தங்கையை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைத்து விட்டோம். இருந்தாலும் ஆறுமுகம் அந்த காதலைத் தொடர முயற்சி செய்து வந்தார். இது எனக்கு பொறுக்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது நண்பர்களுடன் சேர்ந்து ஆறுமுகத்தை டாஸ்மாக் கடைக்கு அழைத்து மது அருந்த வைத்தோம். அப்போதும் அவரிடம் எனது தங்கையை காதலிப்பதை விட்டுவிடுமாறு சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான், எனது நண்பர்கள் உதவியுடன் கத்தியால் மது போதையில் இருந்த ஆறுமுகத்தின் கழுத்தை அறுத்துக் கொன்றேன். பின்னர் அவரை புதைத்து விட்டோம்.
The post வாலிபர் கொன்று புதைப்பு; தங்கையுடன் காதலை கைவிட மறுத்ததால் தீர்த்துக் கட்டினேன்: சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.