சென்னை: சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை பார்க்க வந்த மூதாட்டியிடம் கைவரிசை காட்டியுள்ளனர். திருவான்மியூர் பெரியார் நகரை சேர்ந்த மூதாட்டி வேலம்மாள் (70) என்பவரின் தாலிச் செயின் திருட்டு நடைபெற்றுள்ளது. அன்னதானம் வழங்கிய இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் தாலிச் செயின் பறிக்கப்பட்டுள்ளது.