வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுப்பு படியில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவி

 

கோவை,ஏப்.10: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் தற்போது முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அந்த மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தினார்.

அதன்பிறகு கடந்த 7ம் தேதி மற்றும் நேற்று நடைபெற்ற தேர்வின் போது, மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுப்பு படியில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவி appeared first on Dinakaran.

Related Stories: