புதுச்சேரி முதல்வருடன் ஆதவ் அர்ஜுனா தீடீர் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா?

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியிருப்பது, கூட்டணி மாற்றமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று மாலை புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் 40வது இளைஞர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க வந்த இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவரும், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுசெயலாளருமான ஆதவ் அர்ஜுனா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிவுடன் இணைந்து கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின்போது புதுச்சேரி, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.நடிகர் விஜய், பாஜ எதிர்ப்பதாக கூறும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசி இருப்பது கூட்டணி மாற்றத்துக்கான அச்சாரமாக அரசியல் நோக்கர்கள் கருகின்றனர். எனவே அடுத்து வரவுள்ள தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

The post புதுச்சேரி முதல்வருடன் ஆதவ் அர்ஜுனா தீடீர் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா? appeared first on Dinakaran.

Related Stories: