வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த 19 வயது பெண் கடந்த மாதம் 29ம் தேதி தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை . இது குறித்து அவரது பெற்றோர் கடந்த 4ம் தேதி போலீசில் புகார் கொடுத்தனர். பின்னர் இளம்பெண் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 6ம் தேதி இளம்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளை போதைப்பொருள் கொடுத்து 6 நாட்களில் 23 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார். ஒவ்வொருவரும் போதைப்பொருள் கொடுத்து இளம்பெண்ணை பல்வேறு ஓட்டல்கள், விடுதிகளுக்கு அழைத்து சென்று கும்பல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. புகாரின்பேரில் 12 பேர் மற்றும் அடையாளம் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
The post 19 வயது பெண் 23 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்: உ.பியில் 9 பேர் கைது appeared first on Dinakaran.