துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே வயதான தம்பதியை கட்டிப்ேபாட்டு 21 பவுன் நகைகளை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த தளவாய்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் (73). இவரது மனைவி கமலவேணி (60). இவர்கள் நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் வெளியே வந்து பார்த்தார் மகாலிங்கம். முகமூடி அணிந்திருந்த 4 பேர் நின்று ெகாண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அடுத்த கணமே, 4 பேரும், மகாலிங்கத்தின் கை, கால்களை கட்டி வீட்டுக்குள் தூக்கி சென்றனர். இதை பார்த்த கமலவேணி, நைசாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டார். இதனால் அவரையும் பிடித்து கை, கால்களை பார்சல் ஒட்ட பயன்படுத்தப்படும் டேப் மூலம் கட்டி போட்டனர்.
பின்னர் இருவரையும் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். கண்களையும் ேடப்பால் ஒட்டினர். சத்தம் ேபாடக்கூடாது என்று மிரட்டியவாறு நகைகள் எங்கு உள்ளது என்று கமலேவணியிடம் கேட்டனர். அவர் கூறிய இடத்துக்கு சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 15 பவுன் நகைகளை எடுத்து கொண்டனர். மேலும் கமலவேணி அணிந்திருந்த 5 பவுன் செயின் மற்றும் அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தோடை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து தம்பதியர், கையில் கட்டியிருந்த டேப்பை வாயால் கடித்து அவிழ்த்து வீட்டுக்கு வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். பின்னர் துவரங்குறிச்சி போலீசில் மகாலிங்கம் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிந்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
The post துவரங்குறிச்சி அருகே நள்ளிரவில் பரபரப்பு; வயதான தம்பதியை கட்டிப்போட்டு 21 பவுன் நகை துணிகர கொள்ளை: முகமூடி கொள்ளையர் அட்டகாசம் appeared first on Dinakaran.