கோத்தகிரியில் பிளாஸ்டிக் இல்லா நீலகிரி விழிப்புணர்வு

கோத்தகிரி : கோத்தகிரியில் ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் பிளாஸ்டிக் இல்லா நீலகிரி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தேசிய பசுமை படை மற்றும் நெஸ்ட் அமைப்பின் மூலம் கோத்தகிரியில் மிகப்பெரிய அளவிலான தொடர் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், வட்டாட்சியர், தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டு துணிப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒரசோலை நடுநிலைப்பள்ளி, அந்தோனியார் நடுநிலைப்பள்ளி, விஸ்வ சாந்தி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு துணிப்பை கொடுத்து பிளாஸ்டிக்கினால் உருவாகும் பல் உயிர் தன்மைக்கான பாதிப்புகளை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கோத்தகிரி பஸ் நிலையம், காமராஜ் சதுக்கம், ஆட்டோ ஓட்டுநர்கள், பலருக்கும் பொதுமக்களுக்கும் துணிப்பை வழங்கியும், பசுமை அட்டைகள், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், விவசாய கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விவசாய ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துணி பைகள் வழங்கினர்.

The post கோத்தகிரியில் பிளாஸ்டிக் இல்லா நீலகிரி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: