பெரணமல்லூரில் ஜிபேவில் பணம் செலுத்தி விட்டதாக துணிக்கடை உரிமையாளரிடம் மோசடி

*4 வாலிபர்கள் கைது: பைக், செல்போன்கள் பறிமுதல்

பெரணமல்லூர் : பெரணமல்லூர் பஜார் வீதியில் செய்யாறு பெரிய கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் ஆண்கள் ஆடையகம் என்ற பெயரில் ரெடிமேட் துணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடைக்கு வந்த நான்கு வாலிபர்கள் டி-ஷர்ட், சட்டை, பேண்ட், சார்ட்ஸ் உள்ளிட்ட ரெடிமேட் துணிகளை வாங்கினார்.

இதன் மதிப்பு ரூ.5,500 என கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர்கள் ஜிபேவில் பணம் செலுத்துவதாக கூறி செல்போனில் பணம் செலுத்தி விட்ட மெசேஜை கடை உரிமையாளரிடம் காட்டி விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் தனது அக்கவுண்டில் பணம் வந்ததா? என ஆராய்ந்துள்ளார். ஆனால் பணம் ஏதும் வரவில்லை என தெரிந்து அந்த நபர்கள் தன்னை ஏமாற்றி விட்டதை அறிந்துள்ளார். உடனடியாக கடையை விட்டு வெளியே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அந்த நான்கு பேரும் எடுத்து வந்த மூன்று பைக்கில் தப்பிச் சென்றனர். உடனடியாக கடை உரிமையாளர் தனது பைக்கில் அவர்களை துரத்தி சென்றுள்ளார். மேலும் அவர்கள் செல்லும் வழியில் உள்ள தனது நண்பர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அப்போது எருமை வெட்டி அருகே அப்பகுதி மக்கள் உதவியுடன் பைக்கில் தப்பி சென்ற நான்கு பேரையும் மடக்கி பிடித்தனர். இதனை தொடர்ந்து பெரணமல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் கடைக்கு வந்து ஏமாற்றிய வாலிபர்கள் நமத்தோடு பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(18), ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சார்ந்த சுரேந்தர்(19), விக்னேஷ்(18), சென்னை போரூர் பகுதி சேர்ந்த விக்னேஸ்வரன்(18) என தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து மூன்று பைக் மற்றும் நான்கு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெரணமல்லூரில் ஜிபேவில் பணம் செலுத்தி விட்டதாக துணிக்கடை உரிமையாளரிடம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: