இதனால் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்த உத்தரவு மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலை., சட்டத் திருத்த 2வது மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார்.
இந்நிலையால், தமிழக அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆர்.என்.ரவி பணியாற்றி வருகிறார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்டால் புதிய ஆளுநராக யாரை நியமிக்கலாம் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தவாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post ஆளுநர் பதவி விலக வழுக்கும் கோரிக்கை.. ஆர்.என்.ரவியை மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.