சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு ஆதி வனம் திட்டம்: அமைச்சர் தகவல்

சென்னை: சட்டப் பேரவை கேள்வி நேரத்தின் போது பென்னாகரம் ஜி.கே.மணி (பாமக) பேசுகையில், “பசுமை பரப்பினை அதிகரித்து கால்நடை மாற்றத்தின் வீரியத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்றார். இதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “பசுமை, சுற்றுச்சூழலை பாதுகாக்க கடந்த மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 25 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் 100 மரகத பூஞ்சோலைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடற்கரையில் சூறாவளி காற்று பாதிக்காமல் இருப்பதற்கு 25 கோடி ரூபாய் உயர் அரண் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த 3 ஆண்டுகள் அது செயல்படுத்தப்படும். சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிவனம் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தினை வீரியத்தை குறைக்கவும் தமிழக அரசு பசுமை தமிழ்நாடு இயக்கம் கடந்த 2021 முதல் செயல்படுத்தி வருகிறது” என்றார்.

The post சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு ஆதி வனம் திட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: