பிரியாணி கடைகளை குறிவைத்து மோசடி: போலி அதிகாரி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே பிரியாணி கடை நடத்துபவர் எழில்முருகன்(49). நேற்று இவருடைய செல்போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், தான் மதுரை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்றும், தனிப்படை சோதனை நடத்தியதில், உங்களுடைய கடையில் தரமின்றி பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர், அதற்கான நோட்டீசை ரத்து செய்ய ஜிபே மூலம் ரூ.500 செலுத்தும்படி கூறியுள்ளார்.

சந்தேகம் அடைந்த எழில்முருகன், நேரில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படி அங்கு வந்தவரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் பிடித்து விசாரித்ததில், கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் (45) என்றும், பல்வேறு ஊர்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி பிரியாணி கடை உரிமையாளர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்

The post பிரியாணி கடைகளை குறிவைத்து மோசடி: போலி அதிகாரி கைது appeared first on Dinakaran.

Related Stories: