வாரணாசியில் கொடூரம்; 19வயது இளம்பெண் 22 பேரால் பலாத்காரம்

வாரணாசி: உ.பி மாநிலம் வாராணாசியை சேர்ந்த 19வயது இளம்பெண் கடந்த மார்ச் 29 அன்று தனது நண்பரைப் பார்க்க வெளியே சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். பாண்டேபூர் சந்திப்பில் கடந்த 4ம் தேதி அவர் மீட்கப்பட்டார்.

விசாரணையில் போதை மருந்து கொடுத்து கடந்த ஒருவாரமாக 22 பேர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். பல்வேறு இடங்களுக்கு அவரை கடத்திச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களை தேடும்பணி நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

The post வாரணாசியில் கொடூரம்; 19வயது இளம்பெண் 22 பேரால் பலாத்காரம் appeared first on Dinakaran.

Related Stories: