அத்துமீறி நுழைந்த நபரால் கனடா நாடாளுமன்றம் அதிரடியாக மூடல்

ஒட்டாவா: அத்துமீறி நுழைந்த நபரால் கனடா நாடாளுமன்றம் அதிரடியாக மூடப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, கடந்த மார்ச் 23 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், கனடா நாட்டின் நாடாளுமன்ற ஹில்ஸின் கிழக்குத் தொகுதிக் கட்டிடத்திற்குள் மர்ம ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.

அவர் அன்றிரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தார். அடுத்த நாள் காலை வழக்கம் போல் பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்து சென்ற போது, மர்ம நபர் உள்ளே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து கிழக்குத் தொகுதி கட்டிடத்திற்குள் இருந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு கனடா நாடாளுமன்றம் மூடப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரிடம் குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

The post அத்துமீறி நுழைந்த நபரால் கனடா நாடாளுமன்றம் அதிரடியாக மூடல் appeared first on Dinakaran.

Related Stories: