ஜூன் 2ஆம் வாரம் வரை இந்தியர்களுக்கு விசா வழங்க திடீர் தடை: சவுதிஅரேபியா திடீர் அறிவிப்பு

ரியாத்: இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரை விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை சவூதி அரேபியா அரசு செயல்படுத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்து, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறது. ஹஜ் யாத்திரை முடிவடையும்வரை 14 நாடுகளுக்கு உம்ரா விசா, வணிக விசா, குடும்ப விசா போன்றவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வரும் 13ஆம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு உம்ரா பயணம் உள்ளிட்ட சில வகையான விசா வழங்கப்படும். அதன்பிறகு, ஹஜ் தவிர்த்து அனைத்து வகை விசாக்களும் நிறுத்தப்படும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட 1000க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல், வெப்பம் உள்ளிட்டக் காரணங்களால் உயிரிழந்தனர். அவர்களில் பலர் விசா காலம் முடிந்த பிறகும், சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதனால் சவுதி அரசு இந்த புதிய நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

5 ஆண்டு தடை
சவுதி அதிகாரிகள் கூறுகையில்,’ ஹஜ் பயணத்தில் ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட கோட்டா இருக்கிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்வதைத் தடுக்க முடியும். இந்த உத்தரவை மீறும் நபர்கள் அடுத்த 5 ஆண்டுகள் சவுதிக்குள் நுழையத் தடை விதிக்கப்படும். ஹஜ் விசா வைத்திருப்போர் ஏப்ரல் 13ம் தேதிக்கு பிறகும் சவுதி வரலாம்’ என்றனர்.

The post ஜூன் 2ஆம் வாரம் வரை இந்தியர்களுக்கு விசா வழங்க திடீர் தடை: சவுதிஅரேபியா திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: