அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் நேபாளத்தை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க நபர் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; நான், ஆந்திராவில் காவலாளி வேலை செய்து வருகிறேன். நேபாளத்தை சேர்ந்த லால்(28) என்பவர் ஒருவாரத்துக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்புகொண்டு கோயம்பேடு பகுதியில் வாட்ச்மேன் வேலை வாங்கி தருவதாகவும் குடும்பத்துடன் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து தருவதாக கூறியதால் குடும்பத்துடன் கோயம்பேடு பகுதிக்கு வந்த பிறகு ஒரு வீட்டை வாடகை எடுத்து கொடுத்து தங்கவைத்தார். இதன்பின்னர் அடிக்கடி வீட்டிற்கு வருவது வழக்கம்.
ஒருநாள் எனது 13 வயது மகளை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி லாலிடம் தெரிவிக்கலாம் என்று சென்றபோது தான் வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்புக்கு லால்வரவில்லை என்று தெரிந்தது. உடனடியாக லால் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் என்று இருந்தது. எனவே, லால் எங்கு உள்ளார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தபோது தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வாட்ச்மேனாக லால் அண்ணன் வேலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது ஒரு வீட்டில் சிறுமி இருப்பது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு லாலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக சிறுமியிடம் நடத்திய விசாரணையில், ‘’ பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்’ என தெரியவந்தது. இதன்பின்னர் லாலிடம் விசாரணை செய்தபோது அவருக்கு ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்துள்ளது தெரிந்தது. அவருக்கு குழந்தை இல்லாததால் பிரச்னை ஏற்பட்டு மனைவி பிரிந்துசென்றுவிட்டார். இதனால் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடு0த்துள்ளார். இதையடுத்து போக்சோ வழக்குபதிவு செய்து லாலை கைது செய்து எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு நீதிமன்ற ஜாமீனில் லாலை விடுவித்தனர்.
The post சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: நேபாள வாலிபரிடம் விசாரணை appeared first on Dinakaran.