குடும்ப பிரச்சனை காரணமாக மணிகண்டன் – லாவண்யா தம்பதியினர் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் 5 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து லாவண்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2 முகமூடி அணிந்த நபர்கள் அதிகாலை வீட்டிற்கு வந்ததாகவும், தன்னிடம் இருந்து தங்க நகைகளை பறித்துக்கொண்டு குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டு சென்றதால் குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். லாவண்யாவின் வாக்குமூலம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் லாவண்யா, அவரது தாயார் மற்றும் சகோதரியிடம் போலீசார் நேற்று முதல் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விடிய விடிய நடந்த விசாரணையில், மணிகண்டன் – லாவண்யா இருவரும் பிரிந்திருந்த நிலையில் மன வேதனையில் லாவண்யா இருந்ததாகவும், அதன் காரணமாகவே 5 மாத குழந்தையை தண்ணீர் பேரலில் அமுக்கி கொன்றதாகவும் லாவண்யாவின் தாயார் வாக்குமூலம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையை கொன்றதற்கு மன அழுத்தம் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
The post தண்ணீர் பேரலில் தன் 5 மாத ஆண் குழந்தையை அமுக்கி கொன்ற கொடூர தாய்: புதுக்கோட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.