ஐபிஎல்லில் தொடர்களில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. கடந்த 2013ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக பும்ரா ஆடி வருகிறார். கடந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த பும்ரா, முழுமையான குணம் பெறாததால், தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக இதுவரை, ஆட முடியாமல் போனது. இந்நிலையில் அவரது உடல் நிலை தேறிவிட்டதால், விரைவில் மும்பை அணிக்காக அவர் ஆடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று நடக்கும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா, மும்பை அணிக்காக களமிறங்குவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், வரும் 17ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் மும்பை அணிக்காக பும்ரா ஆடுவார் என மும்பை அணி வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்துள்ளன. இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் 3ல் தோல்வியை சந்தித்துள்ள மும்பை அணிக்கு பும்ராவின் வருகை வரப்பிரசாதமாக அமையும் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
The post மும்பை அணியில் மீண்டும் பும்ரா appeared first on Dinakaran.