கேப்டனாக 5 விக்கெட் பாண்ட்யா சாதனை

லக்னோ அணியுடனான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியது. இருப்பினும், அந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா, 16 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். தவிர, பந்து வீச்சில், 36 ரன்கள் மட்டுமே தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக செயல்பட்டு, பந்து வீச்சில் குறைந்த ரன்களுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் என்ற சாதனையை இதன் மூலம் ஹர்திக் நிகழ்த்தி உள்ளார். தவிர, நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக, முதல் ஐந்து விக்கெட் வீழ்த்திய சாதனையையும் அவரே படைத்துள்ளார்.

இதற்கு முன், 2009ல் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்ட அனில் கும்ப்ளே, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில், 16 ரன் தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக நீடித்து வந்தது. அந்த சாதனையை தற்போது பாண்ட்யா தகர்த்துள்ளார். இந்த பட்டியலில், ஜேபி டுமினி (2015), 17 ரன்னுக்கு 4 விக்கெட், ஷேன் வார்ன் (2010), 21 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

The post கேப்டனாக 5 விக்கெட் பாண்ட்யா சாதனை appeared first on Dinakaran.

Related Stories: