சென்னை வந்த வேன் மோதி 2 பேர் பலி

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டெல்லிபாபு(62). இவர் நேற்று மதியம் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அதே பகுதியை சேர்ந்த பழனி(62) என்பவருடன் ஆம்பூருக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோவிந்தாபுரத்தில் இருந்து சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தபோது, கோவையில் இருந்து சென்னைக்கு வந்த சரக்குவேன், டூவீலரில் மோதியதில் டெல்லிபாபு சம்பவ இடத்திலும், பழனி மருத்துவமனையிலும் இறந்தனர்.

The post சென்னை வந்த வேன் மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: