சமீபத்தில் சிறையின் கேன்டீன் மற்றும் பல்பொருள் அங்காடியில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறை விஜிலென்ஸ் போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். சிறையில் பணியாற்றும் வார்டன்கள், முறைகேடாக கைதிகளிடம் பொருட்களை கொடுத்துவிட்டு அவர்களின் உறவினர்களிடம் இருந்து தங்களது சொந்த வங்கி கணக்கிற்கு ஜிபே மூலம் பணம் பெற்றுக்கொண்டதை கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக சிறை விஜிலென்ஸ் போலீசார், சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாளுக்கு அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கைதிகளின் உறவினர்களிடம் இருந்து ஜிபே மூலம் பணம் பெற்றதாக வார்டன்கள் அபிமன்னன், பாண்டி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சேலம் சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத்திற்கு டிஜிபி உத்தரவின்படி, வார்டன்கள் அபிமன்னன், பாண்டி ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் உத்தரவிட்டார்.
The post சேலம் மத்திய சிறையில் பொருட்கள் கொடுத்து கைதிகளின் உறவினர்களிடம் ‘ஜிபே’ மூலம் பணம் வசூல்: வார்டன் 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
