வக்ஃபு திருத்தச் சட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது

டெல்லி: வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. அங்கு இம்மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்.பி.க்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இந்நிலையில், வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

 

 

The post வக்ஃபு திருத்தச் சட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: