வாழ்வில் அமைதியும், வளமும் சேர்க்கும் ஸ்ரீராம நவமி

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே “ராம’’ என்ற இரண்டு
எழுத்தினால்’’.

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு கோதண்ட ராமர் சீதாதேவி, லட்சுமணருடன், அருள்தரும் ருக்மணி சத்ய பாமா ஸ்ரீவேணுகோபாலருடன் குடிகொண்டுள்ள திருத்தலமாகிய சிறப்பு வாய்ந்த சென்னை, நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள ஆலயத்தில் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூபியாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் (தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்டது) சிறப்பம்சமாகும். ஸ்ரீராம ரக்க்ஷை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில், ஸ்ரீ ராம நவமி பெருவிழா வழக்கம்போல் இவ்வாண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பின்வரும் நிகழ்ச்சி நிரல்படி ஸ்ரீ கோதண்டராமருக்கு லட்சார்ச்சனை கடந்த 28.3.2025 வெள்ளிக்கிழமை முதல் 7.4.2025 திங்கட்கிழமை வரையும், 3.4.2025 வியாழக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி 06.04.2025 முடிகிறது. நாளைய தினம் அதாவது 6.4.2025 ஸ்ரீ ராம நவமி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 7.4.2025 திங்கள் மாலை 7.00 மணி அளவில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு கண்டருள்வார். பக்தர்கள் இந்த ஸ்ரீ ராம நவமி விழாவில் ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை, லட்சார்ச்சனை, ஸ்ரீ சீதா ராமா கல்யாண உற்சவ சங்கல்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இறைவன் அருளை பெற வேண்டுகிறோம்.

The post வாழ்வில் அமைதியும், வளமும் சேர்க்கும் ஸ்ரீராம நவமி appeared first on Dinakaran.

Related Stories: