சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்வதி அம்மன் கோயிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரம் முழுமையாக அகற்றப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது. புதிய கோயில் கட்டுவதற்காக மதில் சுவரில் ஊடு உள்ள குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.