இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக தொழிலாளியின் மனைவி கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாராம். தாய் இறந்த துக்கத்தில் இருந்த மகளிடம் தொழிலாளி தொடர்ந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் செய்வதறியாமல் இரு மகள்களும் வேதனை அடைந்தனர். நேற்று முன்தினம் தாய்க்கு காரிய ஈமச்சடங்கு நடந்தது.
இதில் கலந்து கொண்ட உறவினர்களிடம் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தந்தையின் சில்மிஷம் குறித்து தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தொழிலாளியிடம் தட்டிக்கேட்டனர். ஆனால் அவர், தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோன்மணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தொழிலாளியை நேற்று கைது செய்தார்.
* சிறுவர்களுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை ; சிறுவன் கைது
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா உப்புப்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தான். கடந்த 30ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோருக்கு அந்த சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
மேலும், செல்போனில் ஆபாச படங்களையும் காண்பித்துள்ளான். பீடி, சிகரெட் புகைக்குமாறு கூறி மிரட்டல் விடுத்துள்ளான். இதுகுறித்து புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து 15 வயது சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
The post மகளுக்கு பாலியல் தொல்லை விஷம் குடித்து தாய் தற்கொலை: போக்சோவில் தந்தை கைது appeared first on Dinakaran.