லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி காமராஜர் பஸ் நிலையத்தில் வெடி குண்டு வைத்துள்ளதாக நேற்று காலை 11 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் போன் செய்துள்ளார். உடனடியாக போலீசார் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களை பஸ்நிலையத்திற்கு வரவிடாமல் லால்குடி ரவுண்டானா பகுதியில் நிறுத்தச் செய்தனர். பயணிகள், மாணவர்களை ரவுண்டானா பகுதிக்கு அனுப்பினர். பின்னர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.
The post பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.