ஊத்துக்குளி வெண்ணெய், நெய்க்கு புவிசார் குறியீடு? சட்டசபையில் அமைச்சர் பதில்

பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெருந்துறை எஸ்.ஜெயக்குமார் (அதிமுக) பேசுகையில், ‘‘ஊத்துக்குளி வெண்ணெய் என்பது தரத்திலும், சுவையிலும் உலகப் பிரசித்தி பெற்றது. ஊத்துக்குளி வெண்ணெய், நெய்க்கு புவிசார் குறியீடு வழங்கவும், மேலும் வெண்ணெய், நெய்க்கு ஒரு பதப்படுத்தப்பட்ட குளிரூட்டும் நிலையம் அமைக்கவும் அரசு முன்வருமா” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், “இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான் 64 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறோம்.

நிச்சயமாக ஊத்துக்குளி வெண்ணெய்க்கும் அதற்கு தேவையான அந்த சாத்தியக்கூறுகள் இருப்பின் நிச்சயமாக நமது எம்எஸ்எம்இ துறை அமைச்சர் அதை செய்து தருவார். அங்கே 30 டன் நெய் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தொழிற்பேட்டை அமைப்பதற்கு வசதி இருந்தால் நிச்சயமாக அமைப்பதற்கான வேலையை இந்த அரசாங்கம் செய்யும்” என்றார்.

 

The post ஊத்துக்குளி வெண்ணெய், நெய்க்கு புவிசார் குறியீடு? சட்டசபையில் அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: