சென்னை: அமெரிக்காவில் உள்ள பெண்ணுக்கு இ-மெயில், டிவிட்டர், ஐ-மெசேஜ் மூலம் ஆபாச படங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த திருச்சி இன்ஜினியரை சென்னை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அருணிடம் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், இந்திய குடிமகன் ஒருவர் அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை இணையதளத்தில் பின் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாகவும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கடந்த சில ஆண்டுகளாக இ-மெயில், ட்விட்டர் ஐ-மெசேஜ்கள் மூலமாக ஆபாசமான புகைபடங்களை அனுப்பி கொலைமிரட்டல்களும் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கொடுத்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி சென்னை மத்திய குற்றப்ரிவு சைபர் க்ரைம் உதவி கமிஷனர் காவியா நேரடி கண்காணிப்பில் சைபர் க்ைரம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான குழுவினர் அமெரிக்கா பெண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆபாச படங்கள் அனுப்பப்பட்ட இ-மெயில்கள், டிவிட்டர் விபரங்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, திருச்சியை சேர்ந்த இன்ஜினியரான கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம்(37) என்பவர் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பழக்கமான அமெரிக்க பெண்ணை தன் வசப்படுத்தி அடிக்கடி பேசி வந்ததும், அதன் மூலம் அமெரிக்க பெண்ணின் சில அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொண்டு பாலியல் தொந்தரவு செய்தும், சமூக வலைத்தளத்தில் உனது ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டி பணம் கேட்டு வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சி சென்று அமெரிக்கா பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்து பணம் கேட்டு மிரட்டி வந்த இன்ஜினியர் கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகத்தை நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்ேபான், ஆப்பிள் ஐ-பேட் புரோ மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சென்னைக்கு அழைத்து வந்த சைபர் க்ைரம் போலீசார் இதுபோல் வேறு யாரேனும் மிரட்டி பணம் பறித்தாரா என விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post அமெரிக்கா பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்; திருச்சி இன்ஜினியர் அதிரடி கைது: தூதரகம் அளித்த புகாரின் மீது சைபர் க்ரைம் நடவடிக்கை appeared first on Dinakaran.