இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. இதையடுத்து அதற்கு பொறுப்பேற்று, உடனடியாக அக்காட்சிகளை நீக்குவதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்குச் சொந்தமான, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட் பண்ட் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அளவுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டி வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
The post எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ED அதிரடியாக சோதனை!! appeared first on Dinakaran.