கறம்பக்குடி, ஏப். 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு மேலத் தெருவை சேர்ந்தவர் மஹேந்திரன் (39).இவரது தெரு பகுதியில் அனுமதியின்றி மதுப்பானம் விற்பனை செய்வதாகும் சாராயம் காய்ச்சப்படுவதாகும் வந்த தகவலை அடுத்து ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கும், பக்கத்து வீடு பகுதிகளை சேர்ந்த மஹேந்திரன் உள்ளிட்ட இளைஞர்களுக்கும், காவல் துறை க்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனடியாக மது விலக்கு பிரிவு போலீசார் காவல் துறையினரை அழைத்து உள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு மஹேந்திரனை அழைத்து உள்ளனர். பின்னர் எழுதி வாங்கிக்கொண்டு மஹேந்திரனை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
வீடு திரும்பிய நிலையில், மன உளைச்சலில் இருந்த மஹேந்திரன் அன்று மாலையே வயலுக்கு பயன்படுத்த கூடிய பூச்சி மருந்தை குடித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறி உள்ளனர் உடனடியாக உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனை க்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை தற்கொலை செய்து கொண்ட மஹேந்திரனின் உறவினர்கள் மற்றும் பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்தோர் கறம்பக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சென்றனர். தற்கொலை செய்து கொண்ட மஹேந்திரனின் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை யும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
The post கறம்பக்குடி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.
