பெரம்பலூர், ஏப் 3: பெரம்பலூர், அரியலூர் கோட்டங்களில் மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை மின் நுகர்வோர் நேரடியாக தெரிவிக்க கோட்ட அலுவலகங்களில் \”ஒரு நாள் சிறப்பு முகாம்\” நாளை மறுநாள் (5ம்தேதி) நடைபெறுகிறது என்று பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் கோட்ட நுகர் வோர்களின் கவனத்திற்கு, நாளை மறுநாள் (5ம் தேதி) காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை கோட்ட அளவில் மின் கட்டணம் தொடர்பான புகார்கள், பழுதான மின்னளவி மாற்றுவது தொடர்பான புகார்கள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை மின் நுகர் வோர்கள் நேரடியாக மின்சார வாரியத்திடம் தெரிவிப்பதற்கு ஏதுவாக, அரியலூர் மற்றும் பெரம்பலூர் கோட்ட அலுவலகங்களில் \”ஒரு நாள் சிறப்பு முகாம்\” நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. எனவே மின் நுகர்வோர்கள் மேற்சொன்ன புகார்கள் குறித்து, 5ம் தேதி நடத்தப்படும் சிறப்பு முகாமில் தெரிவித்து, தங்களின் குறைகளை சரி செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post மின் நுகர்வோர் நேரடியாக புகார் தெரிவிக்க 5ம் தேதி ஒரு நாள் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.