ராஞ்சி: ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் பகுதியில் நிலக்கரியை கொண்டு செல்வதற்காக என்டிபிசி நிறுவனம் சரக்கு ரயில்களை இயக்கி வருகிறது இந்நிலையில் அந்த நிறுவனத்தின் இரண்டு சரக்கு ரயில்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பர்ஹைத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போக்னாதி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் இரண்டு ரயில் ஓட்டுனர்களும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த தண்டவாளமும் என்டிபிசிக்கு சொந்தமானது.
The post ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் மோதல்: 2 ஓட்டுனர்கள் பலி appeared first on Dinakaran.