இஸ்லாமியரின் பாதுகாவலர் முதல்வர்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகழாரம்

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் புனித ரமலான் ஈகை பெருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம் அளித்த பேட்டியில், ‘திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினரை நேசக்கரம் கொண்டு அரவணைக்கும் விதமாக, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு, உலமாக்கள் நல வாரியம் அமைத்து கொடுத்தல், புனித ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அவர்களின் ஈகை பெருநாள் முடியும் வரை நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி வழங்கி வருகிறார். சிறுபான்மையினரின் பாதுகாவலராக விளங்கும் இந்தியாவின் முன்மாதிரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி உணர்வுடன் நினைவுகூர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post இஸ்லாமியரின் பாதுகாவலர் முதல்வர்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: