நேபாளத்தில் மன்னராட்சி கோரி போராட்டம்: பயங்கர வன்முறை; 2 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர். நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கொண்டு வர வலியுறுத்தி நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கார்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

வன்முறைகளை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தலைநகர் காத்மண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள நேபாள நாடாளுமன்ற கட்டிடம் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறையில் ஒரு போராட்டக்காரர் மற்றும் ஒரு செய்தியாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். வன்முறைகளில் ஈடுபட்ட 105 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

The post நேபாளத்தில் மன்னராட்சி கோரி போராட்டம்: பயங்கர வன்முறை; 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: