இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் தெரிவித்துள்ளதாவது; ‘ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று கழகத்தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.
டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று ‘பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை’ என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!
பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்று கூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
The post தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என உறுதியைப் பெற தயாரா? – எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி appeared first on Dinakaran.