திருவள்ளூர்: சோழவரம் அருகே ஆத்தூரில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய வினித், முருகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆதம்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் என்பவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் சோதனையில் சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.