தா.பேட்டை, மார்ச் 29: தா.பேட்டை ஒன்றியத்தில் அமராவதி (மாணிக்கபுரம்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது . விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ஆனந்தராஜ் டேவிட் வில்பிரட் தலைமை வகித்தார். இல்லம் தேடி கல்வி ஆசிரியர் சுமித்ரா அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லதா ஆண்டறிக்கை படித்தார்.
சென்னை சேர்ந்த தொழிலதிபர் கனகராஜ் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பள்ளியின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர் இறுதியில். இளநிலை ஆசிரியர் கிருத்திகா நன்றி கூறினார்.
The post தா.பேட்டை அருகே அமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.