இருங்களூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம்

 

திருச்சி, மார்ச் 29: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, TY.SPL.48 இருங்களூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016-17, 2017-18, 2018-19, 2019-20, 2021-22 மற்றும் 2022-23 ம் ஆண்டுகளுக்கான பேரவைக்கூட்டம் கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் விசாலிதேவி தலைமையில் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

இச்சங்கம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. சங்க உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 14 சதவீதம் பங்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் இலால்குடி சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் இளங்கோவன், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் களமேலாளர் சுரேஷ்குமார், சங்கத்தின் செயலாளர் ஞானசேகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post இருங்களூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: