பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜா முகைதீன் நியமனம்: முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வகுத்து தந்த சமூகநீதி பாதையில் இந்த அரசு நடைபோடுகிறது. மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, இவர்களது ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இத்துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில், பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்ளும் பொருட்டு, பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் ஓர் நிறுவனம் ஆகும். இந்த கழகத்தின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திடும் நோக்கில், அதன் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீன் நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜா முகைதீன் நியமனம்: முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: