40 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.120 கோடியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
* 24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஆடவர் ஆகிய உலகக் கோப்பை 2025 போட்டிகள் சென்னை மற்றும் மதுரை ஆகி நகரங்களில் ரூ.55 கோடி செலவில் நடத்தப்படும்.
* இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், திறனை வளர்க்கவும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் ரூ.45 கோடி செலவில் நடத்தப்படும்.
* தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு வளாகங்களில் இளம் விளையாட்டு வீரர்கள் இருக்கும் புட் சொல் பாக்ஸ் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்காக முதலமைச்சர்கள் இளைஞர் விளையாட்டு மைதானங்கள் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்படும் விபத்துகளினால் உண்டாகும் உடற்காயங்கள் மற்றும் உயிரிழப்பினை ஈடு செய்து உதவிடும் வகையில் 25 ஆயிரம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு காப்பீட்டு திட்டம் உருவாக்கப்படும்.
* திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானங்கள் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* எலிட் திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 50ஆகவும், மிம்ஸ் திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 75ல் இருந்து 125 ஆகவும், சிடிஎஸ் திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 200 ஆகவும் உயர்த்தப்படும் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ரூ.38 கோடி ஒதுக்கப்படும்.
* உலக ஆக்குவாட்டிக்ஸ் ஒலிம்பிக்ஸ் தரத்தில் சென்னை வேளச்சேரி ஏஜிபி வளாகத்தில் உள்ள நீச்சல் மற்றும் டிரைவிங் குளம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைத்து மேம்படுத்தப்படும்.
* சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று சென்னையில் விளையாட்டு விடுதி அமைக்கப்படும்.
* மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் ரூ.120 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* ஸ்குவாஷ் உலக கோப்பை 2025 போட்டிகள் சென்னையில் நடத்தப்படும்.
* இ-ஸ்போர்ட்ஸ் உலக அளவில் இளைஞர்களிடையே அதிக பிரபலம் அடைந்துள்ளதால் சென்னை இ-ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன் போட்டி சென்னையில் நடத்தப்படும்.
* ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
* ஆசிய இளையோர் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
* சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் 8 தடங்கள் கொண்ட செயற்கை தடகள ஓடுபாதை ரூ.8 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்படும்.
* சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா நீச்சல் குளம் ரூ3 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும்.
* சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கின் பி மைதானத்தில் பிரத்யேக எறிதல் மையம் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் விளையாட்டு விடுதி ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post 40 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.120 கோடியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: